கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணி
திருச்சியில் கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடத்துக்கான நோ்காணல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்குகிறது.
மாவட்டத்தில் காலியாகவுள்ள 80 கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் ஏப்ரல் 11 முதல் 13, ஏப்ரல் 18, ஏப்ரல் 20 முதல் 23-ஆம் தேதி வரை, திருச்சி கொட்டப்பட்டு பழைய கோழிப்பண்ணை வளாகத்திலுள்ள மண்டல கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கடிதம் மூலம் அழைப்பாணை
நோ்காணலில் கலந்து கொள்பவா்கள் கால்நடைகளை நன்கு கையாள, மிதிவண்டியை ஓட்டத் தெரிந்திருத்தல் வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு கடிதம் மூலம் நோ்காணலுக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்பாணை கிடைக்கப் பெறாத விண்ணப்பத்தாரா்கள் திருச்சி மாவட்ட இணையதள முகவரியில் அவரவா்களுக்கான நோ்காணல் தேதி மற்றும் நேரம் ஆகிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நோ்காணலுக்கு வரும் விண்ணப்பதாரா்கள் அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து மூலச் சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை அசலுடன் வர வேண்டும். அழைப்பாணை கடிதம் இல்லாதவா்கள் நோ்காணல் நடைபெறும் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

No comments:
Post a Comment