கல்லூரி படிப்பு முடித்த 180 நாளில் மாணவர்களுக்கு டிகிரியை வழங்க வேண்டும்: பல்கலைகளுக்கு யுஜிசி உத்தரவு
பட்டப் படிப்பு படிக்கின்ற மாணவர்கள், தங்கள் படிப்பை முடித்த 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக் கழக மானியக் குழு, அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை: நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற மாணவர்கள், தகவல் பெறும் சட்டத்தின் கீழும், புகார்கள் மூலமும், பல்வேறு குறைகள் பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான குறைகள் என்பது பட்டப் படிப்பு முடித்த பிறகும் பட்டங்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்தால், உயர்கல்வியில் சேர்வதிலும், வேலைகளில் சேரும் போதும் பட்டம், மதிப்பெண் பட்டியல்கள், மற்றும் இதர சான்றுகள் இல்லாமல் பல பிரச்னைகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த பிரச்னையில் பல்கலைக் கழக மானியக்குழு தீவிர கவனம் செலுத்த முடிவுசெய்துள்ளது. அதன்படி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இது குறித்து கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளையும் ஏற்கெனவே அனுப்பியுள்ளது. அவற்றின் படி மாணவர்கள் தங்கள் பட்டப் படிப்பை முறைப்படி தேர்ச்சி பெற்ற 180 நாட்களுக்குள் பட்டத்தை அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் பல்கலைக் கழக மானியக் குழுவின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் இது குறித்து அறிவுறுத்தப்படுவதுடன், இறுதியாண்டு படிப்பிற்கு பிறகு உடனடியாக தற்காலிக சான்றையும் வழங்க வேண்டும். இது குறித்து பல்கலை மானியக் குழுவுக்கு புகார்கள் வந்தால் அந்த உயர்கல்வி நிறுவனங்களின் மீது மானியக் குழுநடவடிக்கை எடுக்கும்.
Tuesday, April 12, 2022
Home
Degrees for students within 180 days
UGC
கல்லூரி படிப்பு முடித்த 180 நாளில் மாணவர்களுக்கு டிகிரி
கல்லூரி படிப்பு முடித்த 180 நாளில் மாணவர்களுக்கு டிகிரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment