உருது பள்ளிகள் ஏப்.30 வரை அரை நாள் மட்டுமே இயங்கும் - Daily Dhuniya

Breaking

Monday, April 11, 2022

உருது பள்ளிகள் ஏப்.30 வரை அரை நாள் மட்டுமே இயங்கும்



ரமலான் நோன்பு தொடங்கியுள்ளதால், சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் உருது பள்ளிகள் ஏப். 30 வரை அரை நாள் மட்டுமே செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள் ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து சென்னை உருது பள்ளித் தலைமையாசிரியர்களும் மாநக ராட்சிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில் ஏப்.3 முதல் ரமலான் நோன்பு தொடங்குவதால் அனைத்து சென்னை உருது பள்ளிகளும் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஐந்து பாடவேளைகள் மட்டும் செயல்பட அனுமதிக்க வேண் டும் என கோரியுள்ளனர்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து சென்னை உருது பள்ளிக ளும் வருகிற 30-ஆம் தேதி முதல் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஐந்து பாடவேளைகள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படு கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment