பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, திருப்புதல் தேர்வு அல்லாத பாடங்களில் இருந்து, பள்ளி அளவில் பயிற்சித் தேர்வு நடத்துமாறு, பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி துறையின் பாடத்திட்ட தயாரிப்பு நிறுவனமான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு வழங்கப்பட்ட பாடப்பகுதிகள் இல்லாமல், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் மீதமுள்ள பாடப் பகுதிகளுக்கு, பள்ளி அளவில் தேர்வு நடத்த வேண்டும்.
பள்ளி அளவிலேயே இந்த தேர்வுக்கான வினாக்கள் தயாரித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பிளஸ் 1 மாணவர்களுக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது.
இந்த தேர்வு முடிந்ததும், அவர்களுக்கும் மீதமுள்ள பாடப்பகுதிகளுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தி, பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment