10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குரிய வினாத்தாளை எளிமையாக தயாரிக்க ஆசிரியர்கள் கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Sunday, March 6, 2022

10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குரிய வினாத்தாளை எளிமையாக தயாரிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குரிய வினாத்தாளை எளிமையாக தயாரிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப் புகளுக்கு செய்முறைத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் அறிவிக் கப்பட்டுள்ளது. கடந்த 2ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வுகள் தற் போது நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆயுத்தப்பணிகளை கல் வித்துறைதுவக்கி உள்ளது. இந்நிலையில், நடைபெற உள்ள பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீகிதத்தை குறைந்துவிடாமல் பார்த் துக்கொள்ள வேண் டும் என்றும், அதற்கு மாணவ, மாணவியரை முன்கூட்டியே தயார் படுத்தவேண்டும் என்றும் கல்வித்துறைக்கு உத்தரவி டப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான்,மாண வர்களின் திறன்களை கண்டறிய, திருப்புதல்தேர்வுகள் நடத்தப்பட் டுள்ளன. இருந்தாலும், பொதுத்தேர்வில் மாண வர்களின் தேர்ச்சி சதவி கிதத்தை குறைந்துவிடா மல் பார்த்துக்கொள்ள, வினாத்தாள்களை கடின மில்லாத வகையில் தயா ரிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள்இது குறித்து, உயர் நிலை மற்றும் மேல்நி லைப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. , குறிப்பிட்ட கால அளவுகளில் ஆன்லைனில் மட்டுமே வகுப் புகள் நடத்தப்பட்டன குறிப்பாக 2021- 2022ம் கல்வி ஆண்டைபொருத்த மட்டில், 60 முதல் 70 நாட்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட் டுள்ளன. கொரோனா பயம் காரணமாக, சராச ரியாக 30 சதவீத மாண வர்கள் நேரடி வகுப்பிற் கும் வரவில்லை. மேலும், நீண்ட விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப் பட்டு, நேரடி வகுப்புகள் நடந்த நிலையில், மாண வர்கள் தயாராவதற்கு சில நாட்கள் பிடித்தன. இந்நிலையில்தான் தற் போது அறிவிக்கப்பட் டுள்ள பொதுத்தேர்வை எதிர்கொள்ள வினாத் தாள்களை எளிமையாக தயாரிக்க வேண்டும். இதன் மூல தேர்ச்சி சத விகிதத்தை குறையாமல் பார்த்துக்கொள்வதோடு அதிகப்படுத்தவும் முடி யும்” என்றனர்.

1 comment:

  1. Yes sir. Its too tough to study after long time. So please ask questions in book back also

    ReplyDelete