7 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப TNPSC முடிவு - Daily Dhuniya

Breaking

Tuesday, March 29, 2022

7 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப TNPSC முடிவு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது.

ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது. அதன்படி, 2022ம் ஆண்டுக்கான ஒராண்டு தேர்வு கால அட்டவணை கடந்த டிசம்பர் 7ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

அதில் குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ(நேர்முக தேர்வு அல்லாத பதவி) பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த மாதம் 23ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,529 பணியிடத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து கடந்த 23ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கு மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான முதல்நிலை தேர்வு மே மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படிக்க | மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் செவிலியர்களுக்கு வேலை

இந்த நிலையில் ஓராண்டு கால அட்டவணையில் குரூப் 4 பதவிகளுக்கு மார்ச் மாதத்தில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார்.இதில் குரூப் 4 பதவியில் ஓராண்டு கால அட்டவணைப்படி 5255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் அதிகாரிகள் ஆலோசன

சுமார் 7 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படலாம் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் தேர்வுக்கு எப்போது இருந்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?. தேர்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment