திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு - Daily Dhuniya

Breaking

Friday, March 18, 2022

திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை, மார்ச் 17: திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்ப விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அறக்கட்டளை நிறுவனர் பி.தயாபரன் வெளியிட்ட செய்தி: எங்களது அறக்கட்டளை சார்பில் நிகழாண்டுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் திருச்சி சேவாசங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த 1.5.2019-ஆம் ஆண்டில் முதல் 500 குறட்பாக்களை ஒப்பித்தோ மட்டும் வரும் ஜூன் 5-ஆம் தேதி 501 முதல் 1,330 வரையிலான குறள்களை ஒப்பித்து ரூ.1,000 பரிசு, விருது பெறலாம். இந்த வகையில் 100 பேருக்கு தல ரூ.ஆயிரம் வீதம் மொத்தம் ஒருலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இதையும் படிக்க | அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் : தமிழக அரச

இதுபோன்று 1,330 குறள்களையும் ஒரே முறையில் முழுமையாகஒப்பிக்கு மாணவர்களுக்குரூ.2 ஆயிரம் பரிசு, விருது வழங்கப்படும்.

இந்த வகையில் 100 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் இரண்டு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். திருக்குறள் போட்டியின் மொத்தப் பரிசுத்தொகை ரூ.3லட்சம் ஆகும்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மே 15-ஆம் தேதிக்குள் https://sites.google.com/view/thirumulanathand/thirukkural.thirumoolanathan-arakkattalai என்றவலைதளமுகவரியில்விண்ணப்பட் படிவத்தைப்பதிவிறக்கம் செய்து தமது தன் விவரக்குறிப்பினை அதில்நிரப்பி கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது 'வாட்ஸ் ஆட் எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும். நிறைவு செய்த விண்ணப்பத்தை thirumulanathan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு நுழைவுக கட்டணம் எதுவும் இல்லை. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

நடுவர்களாகப் பணியாற்ற விரும்பும் திருச்சி மற்றும் திருச்சி வட்டாரத்தைச் சேர்ந்துள்ள திருக்குறள் ஆர்வலர்களும், தமிழாசிரியர்களு ‘பூவை.பி.தயாபரன், நிறுவனர் மற்றும் தலைவர், எண் 25, திருக்குறள் தெரு புள்ளம்பாடி-621711' என்ற முகவரியில் ஓர் அஞ்சல் அட்டை மூலம் தங்களது ஒப்புதலைத் தெரிவிக்கலாம்.

நடுவர்களுக்கு மதிப்பூதியம் உண்டு. மேலும் இந்தப் போட்டி குறித்து தகவல் பெற 97865 86992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment