கல்வி உதவித் தொகை 2021-2022 - புதியது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது — விரைந்து புதியது முடிக்க அறிவுறுத்தல் தொடர்பாக. - Daily Dhuniya

Breaking

Monday, March 21, 2022

கல்வி உதவித் தொகை 2021-2022 - புதியது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது — விரைந்து புதியது முடிக்க அறிவுறுத்தல் தொடர்பாக.

பார்வையில் காணும் கடிதங்களின் மீது தங்கள் கவனம் வரவேற்கப்படுகிறது.

2) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ / மாணவியர்களுக்கான 2021-22-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக புதியது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 13.01.2022 முதல் 12.02.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் 25.02.2022 முதல் 07.03.2022 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

3) ஆனால் பல கல்வி நிறுவனங்களிடமிருந்து 2021-22 ம் ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க வரப்பெற்றுள்ளது. 4) மாணவ / மாணவியர்களின் நலன்கருதியும், தகுதியுள்ள ஒரு மாணவருக்கும் கல்வி உதவித்தொகை விடுபடக்கூடாது என்பதற்காகவும், மூன்றாவது முறையாக 2021-22 ம் ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 18.03.2022 முதல் 22.03.2022 வரை. வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, அனைத்து கல்வி நிலையங்களுக்கும் கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்ட விவரத்தினை தெரிவித்தும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தினை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிக்க | பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் (SPD) மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

No comments:

Post a Comment