ஆன்லைனில் தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்படும் - Daily Dhuniya

Breaking

Sunday, March 20, 2022

ஆன்லைனில் தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்படும்

அண்ணா பல்கலை. கழகத் தேர்வு முடிவுகள் தொடர்பாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைன் தேர்வெழுதி தாமதமாக பதிவேற்றம் செய்தவபர்களின் விடைத்தாள் திருத்தப்படாது என தகவல் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்கள் ஆப்சென்ட் என அறிவிக்க அண்ணா பல்கலை. திட்டமிட்டதாக தகவல் வெளியானது.

இதையும் படிக்க | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் ஆன்லைனில் தேர்வு எழுதிய மாணவர்கள் அச்சப்படத் தேவை இல்லை என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்படும். ஆன்லைன் தேர்வுகளால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக இனி நேரடி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment