ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி பாதிப்பு
தேர்வாய் கிராமத்தில் இரு அரசு பள்ளிகளில், போதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என, ஊராட்சி மக்கள் சார்பில், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தேர்வாய் கிராம மக்கள் சார்பில், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு, ஊராட்சி தலைவர் முனிவேல், மனு அனுப்பினார். அதன் விபரம்:தேர்வாய் கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 190 மாணவ - மாணவியர் பயில்கின்றனர். ஏழு ஆசிரியர்களுக்கான பணி இடங்கள் காலியாக உள்ளன.அதேபோல், அங்குள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில், 135 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இதையும் படிக்க | ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளின் விவரங்கள் சேகரிப்பு
அந்த பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ள நிலையில், இரண்டு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.இரு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதிய ஆசிரியர்கள் விரைவில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment