பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு - Daily Dhuniya

Breaking

Friday, March 18, 2022

பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் கல்வி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

* நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் இல்லம் தேடிக்கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* அரசு பள்ளிகளி

ல் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். * மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு.

* அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

* அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் அன்பழகன் பெயரில் திட்டம் அறிவிப்பு, புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.1300 கோடி ஒதுக்கீடு.

இதையும் படிக்க | பள்ளிக்கு கத்தியுடன் வந்து மிரட்டும் மாணவர் - பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் போராட்டம்

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

* 15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்குவதற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு.



* அரசு பள்ளி அல்லாத பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கம் இலவச பாட புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு. * மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு.

* சத்துணவு திட்டத்துக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு.

* அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்

* ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்களுடன் ரூ.7,000 கோடியில் பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்.

இதையும் படிக்க | All India Institute of Medical Sciences Recruitment Notification

* புத்தக வாசிப்பை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் ரூ.5.6 கோடியில் புத்தகக் காட்சிகள்.

* அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.205 கோடி ஒதுக்கீடு.

* இந்த ஆண்டு பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,300கோடி ஒதுக்கீடு.

No comments:

Post a Comment