பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் மட்டுமின்றி பச்சை, காவி உள்ளிட்ட வேறு வண்ணங்களிலும் உடைகள் அணியக்கூடாது - Daily Dhuniya

Breaking

Friday, February 4, 2022

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் மட்டுமின்றி பச்சை, காவி உள்ளிட்ட வேறு வண்ணங்களிலும் உடைகள் அணியக்கூடாது

பள்ளி, கல்லூரிகளில் சீருடை தவிர வேறு எந்த வண்ணத்திலும் மாணவ, மாணவிகள் ஆடைகள் அணியக்கூடாது என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பெங்களூரு விதானசவுதாவில் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த எந்த செயல்களுக்கும் இடம் கிடையாது. மாணவ, மாணவிகள் மத்தியில் நாம் இந்தியர் என்ற மனநிலை ஏற்படவேண்டும். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு எழக்கூடாது என்பதற்காகவே சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் மட்டும் இன்றி பச்சை, காவி உள்ளிட்ட வேறு வண்ணங்களிலும் உடைகள் அணியக்கூடாது.

நாட்டின் எதிர்கால சந்ததியினர் மத்தியில் மதம், இனம் சார்ந்த வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடாது. மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி, கல்லூரிகளில் சீருடையாக எது அறிவிக்கப்பட்டுள்ளதோ? அதை கண்டிப்பாக அணிய வேண்டும். இது அனைவருக்கும் பொருத்தும். இதுதொடர்பாக அனைத்து பள்ளி, கல்லூரிக்கும் இது பற்றிய உத்தரவு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறினார்.

No comments:

Post a Comment