மத்திய அரசின் விதிமுறைகளை மீறி, சி.எம்.டி.ஏ.,வில் உதவி திட்ட அதிகாரி, திட்ட உதவியாளர்களை தேர்வு செய்ய, தேசிய நகரமைப்பு வல்லுனர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நாடு முழுதும் பெருநகர் வளர்ச்சி குழுமங்கள், நகர், ஊரமைப்பு துறைகளில் நகரமைப்பு வல்லுனர்களுக்கான பணியிடங்கள் உள்ளன.
இதற்கான தேர்வுகளில் பங்கேற்க, முறையாக நகரமைப்பு துறை பட்டம் பெற்றவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
அப்போது தான் நகரமைப்பு திட்டமிடல் பணிகள் முறையாக நடக்கும். எனவே, நகரமைப்பு திட்டமிடல் பணியிடங்களில் நகரமைப்பு வல்லுனர்களை மட்டுமே தேர்வு செய்ய, உரிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இது தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், சி.எம்.டி.ஏ.,வில், 15 உதவி திட்ட அதிகாரி, 15 திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் 'ஆன்லைன்' முறையில் பெறப்பட்டுஉள்ளன.
இதில், கட்டட பொறியியல் பட்டம், பட்டயம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய நகரமைப்பு வல்லுனர்கள் கவுன்சில் என்ற அமைப்பினர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளனர்.
தேசிய அளவில் நகரமைப்பு பட்டதாரிகள், நகரமைப்பு துறை வல்லுனர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். இதனால், சி.எம்.டி.ஏ.,வின் நடவடிக்கை பாதிக்கப்படும் என, தெரிகிறது.

No comments:
Post a Comment