50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதி: புதுச்சேரி மாநில அரசு உத்தரவு - Daily Dhuniya

Breaking

Monday, January 17, 2022

50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதி: புதுச்சேரி மாநில அரசு உத்தரவு

புதுச்சேரியில் 50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதி: மாநில அரசு உத்தரவு

கொரோனா பரவல்: புதுச்சேரியில் ஜன.31 வரை 50% அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர உத்தரவு

புதுச்சேரியில் ஜனவரி 31ம் தேதி வரை 50 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக பி மற்றும் சி பிரிவு ஊழியர்களில் 50 சதவீத பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவிடப்பட்டிருக்கிறது. அரசு செயலர்கள், அரசுத்துறை செயலர்கள் முழுமையாக பணிக்கு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் என்றும் புதுச்சேரி அரசு தெரிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment