'முதுநிலை மருத்துவ படிப்புக்கான 'கவுன்சிலிங்' எனப்படும் கலந்தாய்வு நாளை மறுநாள் துவங்கும்,'' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு கொரோனா பரவல் காரணமாக இருமுறை ஒத்திவைக்கப்பட்ட பின் கடந்த ஆண்டு செப்டம்பர் 11ல் நடந்தது. அம்மாத இறுதியில் முடிவுகள் வெளியாகின.மருத்துவ படிப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நிறுத்திவைக்கப்பட்டது. அதை உடனடியாக நடத்தகோரி நாடு முழுதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஒ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங்கை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ''நாளை மறு தினம் முதல் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு துவங்கும். இந்த முடிவு கொரோனாவுக்கு எதிரான போரில் மேலும் வலுசேர்க்கும். கவுன்சிலிங்கில் பங்கேற்கும் அனைத்து டாக்டர்களுக்கும் வாழ்த்துகள்,'' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார்.

No comments:
Post a Comment