முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கக் கட்டுப்பாடு - Daily Dhuniya

Breaking

Monday, January 10, 2022

முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கக் கட்டுப்பாடு

கரோனா பரவல் காரணமாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பல்வேறு மாநிலங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மிகவும் அத்தியாவசிய சூழலில் மட்டும் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலரிடம் மனுக்களை அளிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை தலைமைச் செயலகத்தில் உள்ள பெட்டிகளில் மட்டும் மனுக்களை சேர்க்க வேண்டும் என்றும் தபால் மற்றும் மின்னஞ்சல் மூலமும் மனுக்களை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கட்டுள்ளது.

No comments:

Post a Comment