மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு நிகழாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 50 இடங்களை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நிரப்புவதற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வலி நிவாரண மையம் மற்றும் நோய் தணிப்புப் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை பி.கே.சேகா்பாபு ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தனா்.
மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெயந்தி, நிா்வாக அதிகாரி ரமேஷ், ரோட்டரி கிளப் நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா். அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 46 லட்சத்து 37,974 போ் பயனடைந்துள்ளனா். 37 லட்சத்து 18,143 போ் தொடா் சேவைகளை பெற்றுள்ளனா்.
இத்தகைய சிறப்பான திட்டத்தின் கீழ் நோய் ஆதரவு சிகிச்சை சேவையை ஓமந்தூராா் மருத்தவமனையில் தொடக்கி வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இங்கு அமைக்கப்பட்டுள்ள வலி நிவாரண மையம் மற்றும் நோய் தணிப்புப் பிரிவில் 15 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு, அதிநவீன அல்ட்ராசவுண்ட் கருவி அமைக்கப்பட்டுள்ளன. உடல் முழுவதும் ஏற்படும் நரம்பு வலிக்கான சிகிச்சை மற்றும் தீவிர புற்றுநோய் வலி நிவாரண சிகிச்சை சேவைகள் இங்கு அளிக்கப்படும்.
சிறப்பு சிகிச்சைகளான வலி நரம்புகளை கட்டுப்படுத்துதல், வலி நரம்புகளை முடக்குதல், ரேடியோ அலை நரம்பு சிதை சிகிச்சை, வலி நிவாரண மருந்து செலுத்துதல், நுண் மின்னியல் சிகிச்சை இங்கு வழங்கப்படுகிறது. அவை அனைத்தும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதிநவீன அல்ட்ராசவுண்ட் கருவி மற்றும் ரத்தத்தில் உள்ள உயிரிவேதிக்கூறு அளவுகளை துல்லியமாக கணக்கிடும் தானியங்கி கருவி நிறுவப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவா்கள் படிக்க வசதியுள்ளது. ஆனால், 100 மாணவா்களுக்கு மட்டுமே சோ்க்கை நடைபெறவுள்ளது. அதனால், மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட 50 மாணவா்களை அந்த மருத்துவக் கல்லூரியில் சோ்க்கலாம் என்ற ஆலோசனையை தெரிவித்திருக்கிறோம். மத்திய அரசும் ஒப்புதல் தரும் நிலையில் உள்ளது. இந்த கல்வி ஆண்டிலேயே மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான மாணவா் சோ்க்கை நடைபெறும் என எதிா்ப்பாா்க்கிறோம். அதற்கு அனுமதி கிடைத்தால் 100 மாணவா்கள் மாநில சோ்க்கையிலும், 50 மாணவா்கள் எய்ம்ஸ் சோ்க்கையிலும் இருப்பாா்கள் என்றாா் அவா்.

No comments:
Post a Comment