பள்ளி பாடநுால்களை அச்சிடும் ஒப்பந்தம், தமிழக அச்சகங்களுக்கே வழங்கப்பட வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழக அரசு பாடத் திட்டத்திற்கான பாட நுால்களில், 50 சதவீதம் அச்சிடும் ஒப்பந்தம் வெளிமாநில அச்சகங்களுக்கு வழங்கப்பட உள்ளது.முதல் 'ஆர்டர்' ஆந்திர அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என, அச்சிடுவோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது உண்மையாக இருந்தால், அரசின் செயல் தவறானது.தமிழகத்தில் உள்ள அச்சகங்கள், போதிய பணி இல்லாததால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட வழியில்லாமல் வாடுகின்றன. அவற்றை வாழ வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதை செய்யாமல், அண்டை மாநிலங்களின் அச்சகங்களுக்கு பணி வழங்குவது நியாயமல்ல.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய அனைத்து மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான பாடநுால்களை, சொந்த மாநிலத்தில் தான் அச்சடிக்கின்றன; பிற மாநிலங்களுக்கு வழங்குவதில்லை.மீனவர் பிரச்னைவங்கக் கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள், 42 பேரை கைது செய்த சிங்கள கடற்படையினர், ஆறு விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். சமீப காலங்களில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள், 42 பேரையும் உடனே விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்

No comments:
Post a Comment