அதிமுக ஆட்சிக்காலத்தில் 2011-14ம் ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையில் ரூ.17.36 கோடி முறைகேடு செய்த விவகாரத்தில், தொடர்புடைய மருத்துவம் உட்பட 52 கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் மோசடி நடந்த காலத்தில் துறையின் முன்னாள் அமைச்சர் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் கடந்த 13.7.2018ம் தேதி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தமிழக அரசின் கலை, அறிவியல், பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து வகையான உயர் கல்வி நிறுவனங்களிலும் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, 2011 முதல் 2014 ஆண்டு வரை அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட கல்வி உதவி தொகையில் 17 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்து 369 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பல கட்ட முயற்சியின் விளைவாக கிடைப்பெற்ற சிறப்பு கணக்கீடு தகவல்களின் மூலம் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் 52 கல்லூரி நிர்வாகங்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் உதவித்தொகை குறித்து 10 முறைகேடான வழிகளில் போலியான கணக்குகள் காட்டி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக,சென்னை, கோவை, திண்டுக்கல், கடலூர் (அதிகபட்சமாக 16 கல்லூரிகள்), ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அனைத்து வகையான அரசு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்திருந்தார்.
ஆனால் முறைகேடு நடந்தது அதிமுக ஆட்சி காலத்தில், புகார் அளித்ததும் அதிமுக ஆட்சி காலத்தின் என்பதால் அசோக்குமார் புகாரின் மீது அப்போதைய அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்றவுடன், ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறையில் கிடப்பில் போடப்பட்ட ரூ.17.36 கோடி மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், 2011-14 காலகட்டத்தில் அரசு உயர் கல்வித்துறையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையில், அரசு பிரிவு மாணவர்களை நிர்வாகப் பிரிவினராக போலியாக கணக்கு காட்டியதில் ரூ.4.34 கோடி, பெரம்பலூரில் இல்லாத கல்லூரிக்கு ரூ.58.70 லட்சம், ஒரே மாணவருக்கு ஒரே கல்வியாண்டியில் பலமுறை உதவித்தொகை வழங்கியதில் ரூ.38 லட்சம் என மொத்தம் 10 முறைகேடான வழிகளில் போலியாக கணக்குகள் காண்பித்து 17 கோடியே 36 லட்சத்து30 ஆயிரத்து369 ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்ட மருத்துவம் உட்பட 52 உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், 7 கல்லூரி கல்வி இணை இயக்குநர்கள் மற்றும் 11 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் மீது ஐபிசி 409, 420, rw 120பி, 13(1),(சி) மற்றும் (டி), 13(2), 13(1), (ஏ), 13(2) ஆகிய பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வேணுகோபால் கடந்த 2ம் தேதி வழக்கப்பதிவு செய்தார். அதைதொடர்ந்து 2011-14 ஆண்டு காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17.36 கோடி மோசடியில் ஈடுபட்ட மருத்துவம் உட்பட 52 கல்வி நிறுவனங்கள், அதன் முதல்வர்கள், 7 கல்லூரி கல்வி இணை இயக்குநர்கள் மற்றும் 11 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளுக்கு புகாரின் மீதான மோசடி குறித்து விளக்கம் கேட்டும், அதற்கான விளக்கத்தை இந்த வார இறுதியில் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சம்மனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை இந்த மோசடி குறித்து தீவிரமாக தனது விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது ஒரு நாளைக்கு 2 கல்லூரிகளை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து விசாரணை செய்து வருகின்றனர், அவர்கள் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படலாம்.அதிமுக ஆட்சி காலத்தில் அந்த மோசடி நடந்துள்ளதால் அந்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள், 52 கல்வி நிறுவன உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். ஒரு நாளைக்கு 2 கல்லூரிகளை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித

No comments:
Post a Comment