நாளை 30ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - Daily Dhuniya

Breaking

Tuesday, December 28, 2021

நாளை 30ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் குறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் நாளை 30ம் தேதி 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 20 தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள். இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment