கரோனாவின் தாக்கத்திலிருந்து வெளியே வருவதற்குள் டெல்டா உருவாகி அடுத்த அலையை ஏற்படுத்தி, அதிலிருந்து மீள்வதற்குள் ஒமைக்ரான் வந்து, தற்போது 2022ஆம் ஆண்டின் மீதான நம்பிக்கையை தவிடுபொடியாக்க டெல்மைக்ரான் என்ற புதிய வில்லன் உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதற்கு டெல்மைக்ரான் வகை கரோனா பரவி வருவதே என்று கூறப்படுகிறது.
கரோனா.. டெல்டா.. ஒமைக்ரான்.. அது என்ன டெல்மைக்ரான் என்று புரிந்துகொள்ள அதிக சிரமப்பட வேண்டாம். உருமாறிய டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ்களின் கூட்டுச் சேர்க்கையே டெல்மைக்ரான். இது ஒமைக்ரானை விட அதிதீவிரமாகப் பரவும் தன்மை கொண்டிருக்கிறது.
இது குறித்து மகாராஷ்டிர மாநில கரோனா சிறப்புக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஷஷாங்க் ஜோஷி கூறுகையில், டெல்மைக்ரான், டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டுச்சேர்க்கையாக உள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கரோனா சுனாமி ஏற்பட்டுள்ளது என்கிறார். இதுவரை கரோனா வைரஸ்களால் ஏற்பட்டு வந்த அலைகளையே உலகம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், டெல்மைக்ரானால் சுனாமி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது, 2022ஆம் ஆண்டின் மீதான சிறுதுளி நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கியுள்ளது. டெல்டா வகை கரோனா நாட்டில் பரவலாக பரவியிருந்த நிலையில், தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் அதிகளவில் பரவி வருகிறது. ஒமைக்ரான் தொற்று முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது பல மடங்கு உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸாகவும், இது அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் அதே வேளையில், டெல்டா வகை கரோனாவை விடவும், இது குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது. ஒமைக்ரான் பாதித்தவர்களில் பலி எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டுச்சேர்க்கையான டெல்மைக்ரான் இரண்டு வைரஸ்களின் அமைப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதிலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூடுதல் தவணைகளை செலுத்தவும் நாடுகள் தீவிரம்காட்ட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.
ஒமைக்ரான் பாதிப்பில் இந்தியா எங்கிருக்கிறது?
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 88 பேரும், தில்லியில் 67 பேரும், தெலங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், குஜராத்தில் 30 பேரும், கேரளத்தில் 27 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment