ஸ்டேட் வங்கியில் 1,226 பணி இடங்கள் - Daily Dhuniya

Breaking

Tuesday, December 14, 2021

ஸ்டேட் வங்கியில் 1,226 பணி இடங்கள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் சர்க்கிள் அடிப்படையிலான அதிகாரி பதவிகளுக்கான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அகமதாபாத், பெங்களூரு, போபால், சென்னை, ஜெய்ப்பூர் போன்ற சர்க்கிள்களில் மொத்தம் 1,226 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சென்னை சர்க்கிளில் மட்டும் 276 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும், வணிக வங்கி அல்லது ஏதேனும் ஒரு பிராந்திய கிராமப்புற வங்கியில் அதிகாரியாக 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். 1-12-2021 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விதிமுறைகளின் படி பிரிவு வாரியாக வயது தளர்வு உண்டு. உள்ளுர் மொழி தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-12-2021. மேலும் விரிவான விவரங்களுக்கு https://sbi.co.in/web/careers என்ற இணைய பக்கத்தை சொடுக்கவும்.

No comments:

Post a Comment