ஈரோடு முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்,
பார்வையில் காணும் செயல்முறைகளில், வடகிழக்கு பருவமழை 2021 தொடர்பாக தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
1 மாணாக்கர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்கள் கட்டட நெறிமுறைகள் மற்றும் பள்ளி பாதுகாப்பு கொள்கை 2016- இல் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதலுக்கிணங்க உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
2 மின் இணைப்புகள் மற்றும் கட்டமைப்புகளை கண்காணிப்பது, திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூடுவது. குழிகளை நிரப்பி சீரமைப்பது இடையூறாக/ஆபத்தான நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது. 3 மேல்தளத்தில் தடைபட்ட வடிகால்கள், மாடிப்படிகளை சுத்தம் செய்வது.
4. பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது,
5. சுகாதாரம் மற்றும் உயிர் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணாக்கருக்கு தெரிவிப்பது.
6. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாது பின்பற்றுவது.
தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொடக்கக்கல்வித்துறை சார்ந்த அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மேலே தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தினை இவ்வலுவகைத்திற்கு உடன் அனுப்பி வைக்கவும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

No comments:
Post a Comment