TNPSC புதிய பாட திட்டம் குறித்த இலவச கருத்தரங்கு - நாளை நடைபெறுகிறது - Daily Dhuniya

Breaking

Tuesday, October 5, 2021

TNPSC புதிய பாட திட்டம் குறித்த இலவச கருத்தரங்கு - நாளை நடைபெறுகிறது

சென்னை, அண்ணாநகரில் இயங்கி வரும் இம்பேக்ட் ஐஏஎஸ் அகாடமியில் நாளைமுதல் (அக். 6) தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.

தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும் என, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இம்பேக்ட் ஐஏஎஸ் அகாடமியில் சிறந்தஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக தமிழில் அடிப்படைகளை எவ்வாறு மேம்படுத்தலாம்,தமிழ் கேள்விகளை எளிதில் எதிர்கொள்வது எப்படி எனும் கருத்தரங்கம் நாளை (அக். 6) காலை 10.30 மணிக்கு இம்பேக்ட் பயிற்சி மையத்தில் நடக்க உள்ளது.

இந்த கருத்தரங்கில், தமிழக பாடநூல் கழக மறு சீரமைப்பு குழுவில் 9 மற்றும் 10-ம் வகுப்புக்கான உறுப்பினராக அங்கம் வகிக்கும் தமிழ் ஆசிரியர் எம்.பாலகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளார்.

இந்த இலவச கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இம்பேக்ட் அகாடமி நடத்தும் தொடர்தேர்வு அட்டவணை இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9840557455 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

No comments:

Post a Comment