அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவப் பரிசோதனை - Daily Dhuniya

Breaking

Tuesday, October 5, 2021

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவப் பரிசோதனை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவப் பரிசோதனை

தாம்பரம், அக்.4: சென்னை வண்டலூரை அடுத்த ரத்னமங்கலம் தாகூர் பல்மருத்துவக் கல்லூரி சார்பில் பீர்க்கன்கரணை அரசு பள்ளி மாண வர்கள், ஆசிரியர்களுக்கு இலவச பல்மருத்துவப் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவமுகாமில் பங்கேற்ற 400-க்கும் மேற்பட்ட மாணவர்க ளில் சுமார் 20 சதவீதம் பேருக்கு பல் சொத்தை, துர்நாற்றம், பற்களில் கறை உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இலவச குடும்ப பல் மருத்துவ சிகிச்சைக் கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு பற்களைப் பராமரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படம் திரையிடப்பட்டது. முகாமில் பள்ளி ஆசிரி யர்களும் பல்மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். தாகூர் பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் வெங்கடகிருஷ்ணன், வாய் நோய் குறி அறிதல் துறைத் தலைவர் மருத்துவர் சாய் கிருஷ்ணன், சமூக நலன் பல் மருத்துவத்துறைத் தலைவர் மருத்துவர் வைஷ்ணவி, பள்ளி தலைமை ஆசிரியை பொன்னுத்தாய், மருத்துவர்கள் பிரசன்னா, மகாலட்சுமி, ஜஸ்வர்யா,தருண், காருண்யா, கார்த்திக், சஞ்சய்,தனிஷ், அனந்த கிருஷ் ணன் உள்பங்கேற்றனர்.

No comments:

Post a Comment