6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed., படிப்பில் சேர tngasaedu.in & tngasaedu.org ஆகிய இணையதளங்களில் நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
- கல்லூரிக் கல்வி இயக்ககம்
தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2021 2022) விண்ணப்பங்களை இணையதளம் வழியாக 04.10.2021 முதல் 13.10.2021 வரை www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரி உதவி மையங்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வழி வகை விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.60/- (ரூ. அறுபது மட்டும்) செலுத்தப்படவேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள்விண்ணப்ப பதிவுக்கட்டணம் ரூ.2/- (ரூ. இரண்டு மட்டும்) செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்தக் கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள். சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org என்ற இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
இணைய தளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 04428260098 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம். இது தொடர்பாக care@tngasaedu.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai - 6" என்ற பெயரில் 04/10/2021 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். அனைத்து சேர்க்கை உதவிமையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பப் பதிவு துவங்கும் நாள் 04.10.2021
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்13.10.2021
தொடர்பு எண் 044-28260098

No comments:
Post a Comment