தமிழகம்
ரேஷனில் பனை வெல்லம்... கைத்தறி பட்டுப்புடவை; பல்வேறு திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மொத்தம் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ள நிலையில் 6.92 கோடி மக்கள் ரேஷன் கடைகள் மூலம் பயனடைந்து வருகின்றனர். திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பனை வெல்லத்தை ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். ரேஷன் கடைகளில் 100 கிராம், 250 கிராம், 500 கிராம் மற்றும் ஒரு கிலோ என பனைவெல்லம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விருப்பம் உள்ள மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment