தேசிய அடைவுத்தேர்வை கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Monday, October 18, 2021

தேசிய அடைவுத்தேர்வை கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன் சந்தித்து ஆசிரியர் மன்றத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதா வது:

தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநி லைப்பள்ளிகள் வரும் 1ம் தேதி திறக்கப்படு கிறது. கரோனா தாக்கம் காரணமாக மாண வர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்கும் பள்ளியின் தொடக்க நாட்களில் பாட சுமையின்றி பள்ளிக் கல்வி செயல்பா டுகள் நடக்கிறது.

மாணவர்கள் இரண்டு கல்வியாண்டுகள் கடந்து நேரடி வகுப்புக்கு வரவுள்ளனர். இந்த சூழலில் 10 நாள் கால அவகாசத்தில் அதாவது 12ம் தேதி தேசிய அளவிலான அடைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு தேர்வு பயம் மற்றும் மன அழுத்தத்தை உருவாக் கும் வாய்ப்பு உள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 3 முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அடைவுத்தேர்வில்
இருந்து முழுவிலக்கு அளித்து உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 0 2021-22ம் கல்வியாண்டுக்கான பொதுமாறுதல் ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு முறையில் நடத்தப்பட வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு வழிகாட்டும் நெறிமுறைகள் வெளிப்படை யாக வெளியிடப்பட வேண்டும். ஆசிரியர் களை அச்சமடைய செய்யும் வகையில் உள்ள கட்டாய இடமாறுதல் எனும் பூஜ்ய கலந்தாய்வு கொள்கையை கைவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment