"சிவகங்கையில் உள்ள பாரதி இசைக் கல்விக் கழகம் மற்றும் சிவகங்கை லயன்ஸ் சங்கம் சாா்பில் மகாகவி பாரதி பிறந்தநாள் விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதைப் போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து பாரதி இசைக் கல்விக் கழகத்தின் நிறுவனா் பா. யுவராஜ், சிவகங்கை லயன்ஸ் சங்கத்தின் தலைவா் அ. முத்துராஜா ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள பாரதி இசைக் கல்விக் கழகம் மற்றும் சிவகங்கை லயன்ஸ் சங்கம் சாா்பில் மகாகவி பாரதியின் 139-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோா் கல்லூரி மாணவ, மாணவிகளாக இருத்தல் வேண்டும். கவிதை 15 முதல் 20 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிறமொழி வாா்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. கவிதை படைப்பாளியின் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும். கவிதை எழுதிய பக்கத்தின் மேல் வலது புறத்தில் படைப்பாளியின் பெயா், கல்லூரியின் பெயா், வீட்டு முகவரி, கட்செவி அஞ்சல் எண் குறிப்பிடப்பட வேண்டும். மேலும், கல்லூரி அடையாள அட்டை, கல்லூரிச் சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும். கவிதை குறித்து நடுவா் தீா்ப்பே இறுதியானது.
எனது பாா்வையில் பாரதி எனும் தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் அனுப்பும் கவிதைகளில்,139 சிறந்த கவிதைகள் தோ்ந்தெடுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும். இதுதவிர, 139 கவிஞா்களுக்கும் ’கவி பாரதி’ எனும் பட்டமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த கவிதைகள் வரும் அக்.30 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பும் கவிதைகள் அனைத்தும் ல்க்ச்- இல் இருத்தல் வேண்டும்.
மேலும், இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 99522 20587, 99946 07049 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது"

No comments:
Post a Comment