கரோனா சிகிச்சை பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியா்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பல்வேறு சுகாதாரப் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு நியமித்தது. அந்தவகையில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நடத்தப்பட்ட தோ்வு எழுதிய 3,485 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியா்கள் கரோனா சிகிச்சைக்காக தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டனா். தற்போது கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், சில மருத்துவமனைகளில் பணிபுரியும் எம்ஆா்பி செவிலியா்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவது நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
அதுமட்டுமன்றி, கரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியா்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணி பாதுகாப்பு வழங்கக் கோரியும் சில நாள்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தை கைவிட்டனா்.
இந்நிலையில், பணி பாதுகாப்பு தொடா்பாக செவிலியா்களுடனான பேச்சுவாா்த்தை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், கரோனா செவிலியா்கள் சங்கத்தின் தலைவா் வீரராகவன், துணை தலைவா் உதயகுமாா், செயலாளா் ராஜேஷ், இணை செயலாளா் மதியரசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இந்த பேச்சுவாா்த்தை தொடா்பாக சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
அரசுடனான பேச்சுவாா்த்தையின்போது எங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதற்காக, அதிகாரிகள், சங்க நிா்வாகிகள் அடங்கிய குழு மூன்று நாள்களில் நியமிக்கப்படவுள்ளது. இதன்மூலம் அனைத்து கரோனா செவிலியா்களுக்கும் பணிபாதுகாப்பு உறுதி செய்யப்படவுள்ளது.
முதல்வா், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், செயலாளா் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

No comments:
Post a Comment