'ஆப்கனில் கடந்த 2000 முதல் 2020ம் ஆண்டு வரை பள்ளி, கல்லூரி, பல்கலைகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை' என, தலிபான்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆப்கனில் இருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடன் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின் ஆண்கள் தாடியை குறைக்கவோ, மழிக்கவோ கூடாது என்றும்; பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் பல்வேறு அடாவடி உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலிபான்களின் கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது:
ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்கள் ஆட்சியில் இல்லை. அந்த காலகட்டத்தில் நேட்டோ, அமெரிக்கப் பாதுகாப்பில் ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோர் ஆட்சி செய்தனர். அப்போது, பள்ளி, கல்லூாரி, பல்கலைகளில் படித்து மாணவர்கள் பெற்ற பட்டத்தால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இன்றுள்ள முதுகலைப் படிப்புகள், முனைவர் பட்டங்கள் எல்லாம் மதரஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளைவிட மதிப்பு குறைவானவை. அதனால், தலிபான்களின் தேசத்துக்குப் பயன்படும், மதிப்புகளை உணர்ந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை பணியமர்த்த இருக்கிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment