கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் நுட்ப பயிற்சி இவைகளில் ஏதேனுமொன்றில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
வெளிநாடு செல்வதற்கு முன்பு தமிழ்நாட்டில் குடியிருப்பவராக 3 வருடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
முதல் தலைமுறை தொழில் முனைவோராயிருப்பது அவசியம். ரூ.10 லட்சத்துக்கு குறையாமலும், ரூ.5 கோடிக்கு மிகாமலும் திட்ட மதிப்பீடு கொண்ட உற்பத்தி சேவை நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம்.
திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.50 லட்சத்தை உள்ளடக்கிய 25 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் நேர்காணல் மற்றும் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
எனவே, தொழில் முனைய ஆர்வமுடையவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவு செய்து பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களூர் தபால் நிலையம் அருகில், திருவள்ளுர் - 602003 என்ற முகவரிக்கு அணுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment