புத்தாக்க அறிவியல் மானக் விருது போட்டி - பதிவு செய்வதற்கான கடைசி நாள்.20-10-2021 - CEO - Daily Dhuniya

Breaking

Monday, October 11, 2021

புத்தாக்க அறிவியல் மானக் விருது போட்டி - பதிவு செய்வதற்கான கடைசி நாள்.20-10-2021 - CEO

(நகலின்படி சென்னை-25 தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப கழக செயல் இயக்குநரின் கடிதம் ந.கஎண் 2110/P1/2021 நாள். 06.10.2021ன்படி 2020 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தாக்க அறிவியல் மானக் விருது போட்டியில் பங்குபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கண்காட்சி Manak Competition APP மூலம் நடைபெற உள்ளது. எனவே கடிதத்தில் மாவட்ட அளவிலான தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை Manak Competition APP ல் செப்டம்பர் 6 முதல் அக்டோபர் 6க்குள் பதிவேற்றம் செய்யுமாறு இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடித நாள். 03.09.2021 மற்றும் 21.09.2021 மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அக்டோபர் 6ஆம் தேதி வரை இறுதி நாளாக இருந்ததை 20.10.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இணையம் பதிவுகளை ஏற்காது. எனவே 20.10.2021ம் தேதிக்குள் இணைப்பிலுள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் மாணவர்களை மாவட்ட அளவிலான கண்காட்சியில் கலந்துக்கொள்ள Manak Competition APP மூலம் பதிவேற்றம் செய்து அதன் விவரத்தினை தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட இணைப்பிலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கி 20.10.2021க்குள் இப்பணியினை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி Manak Competition APP

பதிவு செய்வதற்கான கடைசி நாள்.20-10-2021

வழிகாட்டி காணொளி https://www.youtube.com/results?search_query=www.youtube.com/watch?v=vllewtybe8o இணைப்பு- பதிவேற்றம் செய்யாத மாணவர்களின் விவரம்

No comments:

Post a Comment