TNPSC குரூப் 4 & VAO தேர்வு அறிவிப்பு எப்போது? பாடத்திட்டம் மாற்றம்? - Daily Dhuniya

Breaking

Wednesday, September 8, 2021

TNPSC குரூப் 4 & VAO தேர்வு அறிவிப்பு எப்போது? பாடத்திட்டம் மாற்றம்?

தமிழக அரசுத்துறை பணியாளர்களுக்காக நடத்தப்படும் TNPSC தேர்வுகளில், குரூப் 4 மற்றும் VAO பதவிக்கான போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாகலாம் எனவும் தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு
தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் TNPSC, அரசுப் பணிகளுக்கான குரூப் 1 முதல் குரூப் 4 வரையுள்ள தேர்வுகளை நடத்தில் அதன் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. TNPSC நடத்தும் ஒவ்வொரு ஆண்டுக்கான தேர்வு அட்டவணைகள் அதற்கு முந்தய ஆண்டிலேயே வெளியிடப்படுவது வழக்கமாகும். அதன் படி, இந்த ஆண்டுக்கான TNPSC தேர்வுகள் குறித்த அட்டவணை கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கான தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைந்து வந்துகொண்டிருக்கக் கூடிய சூழலில், TNPSC தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதே போல TNPSC தேர்வுகளும் விரைவில் நடத்தப்படும் எனவும், பாடத்திட்டங்களில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் வழக்கமாக TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளை நடத்தும் நாட்கள் சமீபித்து வருவதால் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில் TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் செப்டம்பர் மாதத்தில் கொடுக்கப்பட்டால், டிசம்பர் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பொதுவாக TNPSC குரூப் 4 தேர்வுகளை எழுதுவதற்கு அடிப்படை கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்பதால், லட்சக்கணக்கானவர்கள் இந்த போட்டித் தேர்வில் கலந்து கொள்வது வழக்கம். தவிர ஒரு தேர்வில் வெற்றி பெற்றால் அரசு வேலை கிடைத்துவிடும் என்பதால் இந்த ஆண்டும் குரூப் தேர்வுக்கு போட்டிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என்றாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment