இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ICAI) வரும் நவம்பர் மாதம் நடத்த இருக்கும் CA தேர்வுகளில், ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை திருத்தப்பட்ட திட்டத்திற்கு மாறிய மாணவர்களும் பழைய அல்லது புதிய திட்டத்தேர்வில் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது.
CA தேர்வு
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக பள்ளி தேர்வுகள், கல்லூரி தேர்வுகள் உட்பட எந்தவொரு அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளும் கடந்த 4 மாதங்களாக நடத்தப்படவில்லை. இதற்கிடையில் நாடு முழுவதும் தற்போது குறைந்து வந்துகொண்டிருக்கும் கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் நீட், JEE போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பட்டய கணக்காளர்கள் பணிக்கான தேர்வுகள் வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும் என ICAI அறிவித்துள்ளது.
இதற்கிடையில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை முந்தைய திட்டத்திலிருந்து, திருத்தப்பட்ட திட்டத்திற்கு மாற்றப்பட்ட மாணவர்கள் நவம்பர் மாதம் நடத்தப்பட இருக்கும் பழைய அல்லது புதிய திட்டத்தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என ICAI அறிவித்துள்ளது. அதாவது CA மாணவர்களுக்கான முந்தைய தேர்வுகளின் போது, தேர்வர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வளாகத்தில் வசிக்கும் நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த மாணவர்களும் நவம்பர் மாத தேர்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர CA இறுதி மற்றும் இடைநிலை பழைய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கான கடைசி தேர்வுகளும் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் கொடுக்கப்பட்ட அறிவிப்புகளை கருத்தில் கொண்டு, ஜூலை 21, 2021 முதல் ஆகஸ்ட் 20, 2021 வரை முந்தைய பாடத்திட்டத்திலிருந்து திருத்தப்பட்ட திட்டத்திற்கு மாறிய மாணவர்கள், பழைய அல்லது புதிய திட்டத்தின் படி நடத்தப்படும் இடைநிலை தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

No comments:
Post a Comment