நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் - Daily Dhuniya

Breaking

Tuesday, September 7, 2021

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல்

'நீட்' தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோவிட் 2வது அலையால் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவிட் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து செப்., 12ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நாளில் பல்வேறு மாநிலங்களில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு நடைபெறவுள்ளது. மேலும் சில படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் செப்., 12ம் தேதியே நடைபெறுவதால், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்குகளை நேற்று (செப்., 6) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரு சிலர் கேட்கிறார்கள் என்பதற்காக, 16 லட்சம் பேர் எழுதும் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க இயலாது எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். இதனால், திட்டமிட்டபடி செப்., 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தெரிய வந்துள்ளது.


இந்நிலையில் இன்று ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், 'மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக இருப்பது துயரமானது. நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அவர்களுக்கான நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment