தொல்லியல் துறை முதுநிலைப் பட்டயப் படிப்பின் பயிற்று மொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கற்றுத்தரப்படுகிறது.
விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலைப் பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான மொத்த காலி இடம் 20 எண்ணிக்கைகள், ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.5000 பயிலுதவித் தொகை வழங்கப்படும்.
2021-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் தொடங்க உள்ள ஈராண்டு கால முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு (post graduate diploma in archaeology) விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை தொல்லியல் துறை இணையதளத்தில் https://www.tnarch.gov.in/ மூலமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 16.09.21 மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment