'மத்திய அரசுடன் மோதல் போக்கை விடுத்து 150 ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பயில மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:மதுரை தோப்பூரில் 1264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார். நிலம் கையகப்படுத்தியதை தொடர்ந்து மருத்துவமனை கட்ட மத்திய அரசு 'ஜைக்கா' நிதி நிறுவனத்துடன் நடப்பாண்டு மார்ச்சில் ஒப்பந்தம்
செய்தது.'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவம் படிக்க 150 புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்தி கொள்ளலாம்; மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்து முடிக்கும் போது எய்ம்ஸ் வளாகத்தில் கல்லுாரி கட்டி முடிக்கப்படும். பின் மாணவர்களை இடமாற்றம் செய்து கொள்ளலாம்' என மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.தமிழகத்தை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ கல்வி பயில வாய்ப்பளித்தும் அதை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்கு உரியது. எய்ம்ஸ் கட்டப்படும் மற்ற மாநிலங்களில் தற்காலிக இடங்களில் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் படிப்பை துவக்கி விட்டனர்.
ஆகவே மாநில அரசு மத்திய அரசின் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் நிலை எடுத்து போராடி கொண்டிருந்தால் மாநிலத்தின் மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.
மத்திய அரசுடன் மோதல் போக்கை விடுத்து உடனே 150 ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பயில மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
Friday, September 10, 2021
மோதல் போக்கு வேண்டாம் மாணவர் நலனை பாருங்கள்
Tags
# Politician's
# Students
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Students
Tags:
Politician's,
Students
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment