குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது நீலகிரி மாவட்டத்திலுள்ள குன் னூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்.ஆகஸ்ட் 2021ம் ஆண்டிற்கான சேர்க்கையில் தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கு இம் மாதம் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அடிப்படை யில் தொழிற்பிரிவுகள் வழங்கப்படும். தொழிற் பிரிவுகளுக்கு விண்ணப் பிக்க 14 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப் பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை குன்னூர்அரசினர் தொழிற் பயிற்சிக்கும் கூடலூர் அரசினர் நிலையத்தில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பொருத்துநர்.கடைசலர், கம்மியர் (குளிர்பதனம்), கம்மியர் (மோட்டார் வண்டி), மின்சாரப்பணி யாளர், கம்மியர் (மின்ன ணுவியல்).ஆகிய 2 ஆண்டு தொழிற் பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாண விகளுக்கு கம்பியாள் 2 ஆண்டு தொழிற்பிரி விற்கும், தச்சர் மற்றும் பற்றவைப்பவர் ஆகிய ஓராண்டு தொழிற் பிரி வுகளுக்கும் விண்ணப் பிக்கலாம் அனைத்து பிரி வைச் சார்ந்தவர்களுக்கு நேரடி சேர்க்கையின் மூலம் உடன் பயிற்சியில் சேரலாம். இதற்கு கல்வி (அசல்) சான்றிதழ்களு டன், மதிப்பெண் சான்றி தழ்.பள்ளி மாற்றுச்சான் றிதழ். சாதி சான்றிதழ், ஆதார் எண். புகைப்ப டங்கள் 10 கொண்டு வர வேண்டும். நேரில் வருகை தந்து தங்களுக்கு விருப்ப முள்ள தொழிற்பிரிவை தேர்ந்தெடுத்து பயிற்சி யில் சேர்ந்துக்கொள்ள வாம்.நேரடி சேர்க்கைக்கு வரும்போது. அசல்கல்வி சான்றிதழ்களுடன் மதிப் பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் எண், புகைப்படங்கள் 10 ஆகிய வைகளை கொண்டு வர வேண்டும் கூடலூர் பழங் குடியினருக்கான அரசி னர்தொழிற்பயிற்சி நிலை யத்திற்கு நேரில் வந்து தங்களுக்கு விகுப்பமுள்ள தொழிற்பிரிவை தேர்ந்தெ டுத்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள் ளார்.

No comments:
Post a Comment