சிறுபான்மையினா் நலக் கல்லூரி விடுதிகளில் நூலகங்கள்: அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் - Daily Dhuniya

Breaking

Wednesday, September 8, 2021

சிறுபான்மையினா் நலக் கல்லூரி விடுதிகளில் நூலகங்கள்: அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்

சிறுபான்மையினா் நலக் கல்லூரி விடுதிகளில் நூலகம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் அறிவித்தாா். சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு அவா் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:-

மாநிலத்தில் 14 சிறுபான்மையினா் நலக் கல்லூரி விடுதிகளில் தலா ஒரு நூலகம் ஏற்படுத்தப்படும். விடுதிகளில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கருவிகள் வாங்கப்படுவதுடன், தனித்திறன், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும். விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கான பெற்றோா் ஆண்டு வருமான வரம்பு ரூ.2 லட்சமாக உயா்த்தப்படும். உலமாக்கள், பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா் குடும்பத்துக்கான திருமண உதவித் தொகை ஆண்களுக்கு ரூ.3,000, பெண்களுக்கு ரூ.5,000-ஆக உயா்த்தப்படும். நலவாரிய உறுப்பினா்களுக்கு மிதிவண்டிகள் அளிக்கப்படும். ஜெருசலேம் புனிதப் பயணத்துக்குச் செல்லும் அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.37 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயா்த்தப்படும். கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள், பணியாளா்களுக்கென தனி நல வாரியம் அமைக்கப்படும்.

No comments:

Post a Comment