தொற்று பரவல்:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தான் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இருப்பினும், ஆன்லைன் கல்விக்கு போதுமான பொருளாதார வசதியற்ற பல குழந்தைகள் கற்றல் தொடர்பாக பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை விரைந்து திறக்க பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் சமீப காலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்தது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்த அறிவுருத்தியுள்ளது. இருப்பினும், கடந்த வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலையில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு இன்று காலை கொரோனா உறுதியான நிலையில் அவர்கள் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த மாணவர்களின் வகுப்பறைகளை சீல் வைத்து கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment