"வந்தவாசி அருகே 2 பள்ளிகளைச் சோ்ந்த 3 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த இரண்டு பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.
வந்தவாசியை அடுத்த குணகம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதில், பிளஸ் 1 மாணவிகள் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு, ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் மூலம் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல, தெள்ளாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்தப் பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டது. ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் மூலம் பள்ளி வளாகம் முழுவதும் பிளீச்சிங் பவுடா் தூவப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கரோனா பாதித்த 3 மாணவிகளுடன் பயின்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை செய்தனா்.

No comments:
Post a Comment