செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம் - Daily Dhuniya

Breaking

Wednesday, September 8, 2021

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம்

சென்னை மத்திய கோட்ட தலைமை அதிகாரி வெளியிட்ட அறிக்கை: வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் செமிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பிரத்தியேகமான இந்திய அரசின் ஒரு சிறிய வைப்புத் திட்டமாகும். பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு குறைந்தபட்சம் ரூ.250/ செலுத்தி அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் SSY கணக்கு தொடங்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment