கடந்த மாதம் நடந்த ஊரடங்கு ஆலோசனை கூட்டத்தில், செப்., 1 முதல், ஒன்பது, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை துவங்க திட்டமிடப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.அதேநேரம், கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கல்லுாரிகள், உயிரியல் பூங்காக்கள் திறக்கப்படாமல் உள்ளன.கடந்த சில தினங்களாக, தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தபடி உள்ளது. எனினும் கொரோனா இல்லாத நிலை, ஒரு மாவட்டத்திலும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா, கட்டுப்பாடுகளை தளர்த்துவதா அல்லது அதிகரிப்பதா என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, சென்னை தலைமை செயலகத்தில், இன்று காலை 11:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, பல்வேறு துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.

No comments:
Post a Comment