முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலை, பிஎச்டி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20 கடைசி நாள் - புதுச்சேரி மத்திய பல்கலை - Daily Dhuniya

Breaking

Thursday, August 19, 2021

முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலை, பிஎச்டி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20 கடைசி நாள் - புதுச்சேரி மத்திய பல்கலை

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஒருங்கிணைந்த முதுகலை, பிஎச்டி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவை பல்கலைக்கழகம்:
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு படிப்புகள், பிஎச்டி, முதுநிலை பட்டயப் படிப்பு, வணிகம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பல்கலைக்கழகம் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம்.
நடப்பு கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுகலை, பிஎச்டி ஆகிய படிப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்த நிலையில் பிஎச்டி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று இணையதளத்தில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு முறை அதற்கு விண்ணப்பிப்பது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய www.pondiuni.edu.in என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment