தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களின் இறுதி முடிவுகள் இந்த மாதம் 31ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும், TET தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஆசிரியர்களுக்கு விரைவில் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் விதமாக திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி பகுதி தனியார் பள்ளிகள் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை (ஜூலை 9) நேற்று நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பொதுமக்களுக்கு ரூ.890 மதிப்புள்ள மளிகை மற்றும் மருந்து பொருட்கள் போன்றவற்றை அமைச்சர் வழங்கினார்.
இதன் பிறகு அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், பல தனியார் நிறுவனங்கள் இது போன்று கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அனைத்தும் 75% மட்டுமே கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், அதில் தற்போதைக்கு 40% கட்டணமும், பள்ளிகள் திறந்த பிறகு 2 மாதங்களுக்கு பின்னர் 35% கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் அளித்தால் பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
2013 மற்றும் 2017-2018ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தும் நியமனம் செய்யப்படாமல் உள்ளவர்களுக்கு விரைவில் பணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் ஆசிரியர் பணிக்கான நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பார். தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். மற்ற மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழகத்தில் இந்த மாதம் 31ம் தேதிக்குள் 12ம் வகுப்பு இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment