தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகளில் ஆயுள் காலத்தை அதிகரித்து தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
அரசு பேருந்துகள்:
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் பேருந்துகளை இயக்க 1972 ஆம் ஆண்டு இந்த துறை தோற்றுவிக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் அரசு நகர, மாநகர, விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த துறை மூலமாக தமிழ்நாடு உள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் மண்டலங்களில், மிகப்பெரிய மண்டலமாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் உள்ளது. இந்த மண்டலம் தான் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழகம் மண்டலம் ஆகும். இந்த மண்டலம் சுமார் பத்து மாவட்டங்களை உள்ளடக்கியது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 19,290 பேருந்துகள் இயங்குகின்றன.
மேலும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 2200 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து சார்பில் 385 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பேருந்துகளின் ஆயுட்காலம் முன்னதாக 3 ஆண்டுகள் வரை 7 லட்சம் கி.மீ வரை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதன் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு 7 ஆண்டுகள் 12 லட்சம் கி.மீ வரை பயணம் செய்யலாம் என மாற்றப்பட்டுள்ளது. மற்ற அரசு பேருந்துகள் 6 ஆண்டுகள், 7 லட்சம் கி.மீ தூரம் பயணிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை, 9 ஆண்டுகள் வரை இயங்கலாம் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்று மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment