PF வட்டி விகிதம்:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலமாக அனைத்து அரசு மற்றும் சில அமைப்பு சார்ந்த தனியார் நிறுவங்களில் பணிபுரிவோருக்கு எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அவர்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 சி இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும். இபிஎப்ஓ சட்டத்தின்படி 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது.
10 ஆண்டுகள் ஊழியர் கணக்கில் தொடர்ச்சியாக இத்தொகை செலுத்தப்பட்டு வந்தால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியதமாக கிடைக்கும். இந்நிலையில் இந்தாண்டு கொரோனா காரணமாக, 2020-21 ஆண்டு வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், சந்தாதாரர்களின் டெபாசிட் தொகைக்கு 8.5% வட்டி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் பலர் நிதி நெருக்கடியில் உள்ளனர். இதனால் பலர் தங்களது PF பணத்தை எடுத்துள்ளனர். அதனால் டெபாசிட் செய்யப்படும் பணத்தை காட்டிலும், எடுக்கப்படும் பணம் அதிகமாக இருப்பதனால் வட்டியை மாற்ற வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது EPFO நிறுவனத்துக்கு 6 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும் EPFO சந்தாதார்களுக்கு இந்த மாத இறுதிக்குள் வட்டி தொகை செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு அறிவித்த 8.5 சதவிகித வட்டியுடன் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் (EPFO) பதிவு செய்து கொண்டவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
No comments:
Post a Comment