தனியார் பள்ளிகள்:
இந்தியாவில் கொரோனா பேரிடர் அனைத்து துறைகளையும் வெகுவாக பாதித்துள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து கல்வித்துறை அதிக பாதிப்புக்கு உள்ளாகியது. கடந்த வருடம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் திறனும் மிக மோசமான நிலையில் உள்ளது. கொரோனா பரவலால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் அனைத்து மாநிலங்கங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளனர்.
இதனால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. அதன் காரணமாக தனியார் பள்ளிகள் 50% வரை வருவாயை இழந்துள்ளது என சென்ட்ரல் ஸ்குயர் அறக்கட்டளை ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் மாணவர் சேர்க்கை குறைவால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு 55% வரை மாத ஊதியத்தை குறைத்து வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கிறது.
குறைந்த கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்களின் 64% ஊழியர்களுக்கு ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ஏராளமான ஆசிரியர்கள் வருமானம் இன்றி சிரமப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்பிற்கான தொழில்நுட்ப செலவு மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்கள் அதிகரிப்பதாகவும் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என இந்திய கல்வி தரம் குறித்து ஆராய்ந்து வரும் சென்ட்ரல் ஸ்குயர் அறக்கட்டளை அளித்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment