CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பிரதமர் மோடி வாழ்த்து! - Daily Dhuniya

Breaking

Friday, July 30, 2021

CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பிரதமர் மோடி வாழ்த்து!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மாணவர்களுக்கான அறிவிப்பு ஒன்றை டிவீட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மோடியின் வாழ்த்து:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் முன்னதாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாட திட்டம் குறைக்கப்பட்டு மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடத்த கல்வி வாரியம் திட்டமிட்டது. ஆனால் தொற்று தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யட்டப்பட்டது. இதனால் மாற்று முறையில் மதிப்பெண்களை வழங்க அரசு முடிவு செய்து அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டது.

இந்நிலையில், ஜூலை 31ம் தேதிக்குள் CBSE தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இன்று மதியம் 2 மணி அளவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், 99.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் இறுதியானதாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து தனது டிவீட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மாணவர்களை அவர் இளம் நண்பர்களே என்று அழைத்துள்ளார். பிரகாசமான, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், இன்னும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்றிருக்கலாம் என நினைக்கும் மாணவர்களுக்கு, உங்கள் அனுபவத்திலிருந்து கற்று கொள்ளுங்கள், தலை நிமிர்ந்து நில்லுங்கள்.

உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் முன் எப்போதும் இல்லாத வகையிலான சிக்கல்களை சந்துதுள்ளனர். பல மாற்றங்கள் இந்த ஆண்டு கல்வியில் ஏற்பட்டுள்ளது. மாணவர்களை நினைத்து தான் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment